தெற்கிலிருந்து களவாடப்பட்ட வாகனங்களும் கண்டுபிடிப்பு
தெற்கில் களவாடப்பட்டு வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்களின் உரிமையாளர்களைக் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களுள், தெற்கிலிருந்து களவாடிச் செல்லப்பட்ட பெருமளவு வாகனங்கள் உள்ளதாகவும், அவை போலி ஆவணங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு 59ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல் ஆரியசிங்க தெரிவித்தார்.
இந்த வாகனங்கள் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்த அவர், இதனால், சிலர் வேறு நபர்களுக்குச் சொந்தமான வாகனங்களைச் சொந்தமாக்க முயற்சிப்பதாகவும், மற்றவர்களின் சொத்துக்களைக் கைப்பற்ற முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவிற்கு முல்லைத்தீவில் இந்தத் தகவல்களைக் கூறிய கேணல் ஆசிரியசிங்க, முள்ளிவாய் க்காலில் கைவிடப்பட்டுள்ள வாகனங்க ளைக் காட்சிப்படுத்துவதற்கு ஐந்து இட ங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு கைவிடப்பட்ட சுமார் 400 வாகனங்களைக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்த அவர் அவற்றை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள அதி காரிகள் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்டோர் முன்னிலையில் உரியவர்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக