25 செப்டம்பர், 2010

இலங்கையை ஆச்சரியமிக்க நாடாக மாற்றுவதாயின் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும்: சரத் ஏக்கநாயக்க



ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்றுவதாயின் குண நலப் பண்புள்ள மக்கள் சமுதாயத்தை உருவாக்குவதன் மூலமே அது சாத்தியமாகும். இதற்கு ஆசிரியர்களது பங்களிப்பு மிக முக்கியமென்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

இன்று ரஜரட்ட பல்கலைக்கழக பொல்கொல்லை வளாகத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாம் கொங்கிறீட் கட்டிடங்களை வான் உயரக் கட்டி ஆச்சரியமாகப் பாகீக்கலாம். நெடுஞ்சாலைகளையும் பாலங்களையும் அமைத்து அதனை ஆச்சரியமாகப் பார்க்கலாம். அல்லது சுற்றாடலை தூய்மைப் படுத்தி அழகு படுத்தி அபிவிருத்தி என்று கூறலாம்.

சிலர் நினைக்கக் கூடும் அதுதான் ஆசியாவின் ஆச்சரியமிக்க விடயம் என்று. அதுவல்ல ஆசியாவின் ஆச்சரியம். நல்ல பன்புகளையும் நற்குணங்களையும் கொண்ட ஒரு சமுதாயம் உருவாகுமானால் அது தான் ஆசியாவின் ஆச்சரியமிக்கது. இதற்காக நாம் எமது கல்வியின் மூலம் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். கல்வியின் மூலம் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியம்.

எனவே இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக்குவதாயின் ஆசிரியர்களது பங்கு முக்கியம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக