13 செப்டம்பர், 2010

பிரபல பாடகி சொர்ணலதா காலமானார்



இந்தியாவின் பிரபல பாடகி சொர்ணலதா நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார். நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி சொர்ணலதா (37) சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா 25 தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் கடந்த ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார்.

‘கருத்தம்மா’ படத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் ‘போறாளே பொன்னுத்தாயி....’ எனும் பாடாலை பாடியதற்காக சொர்ணலதா தேசிய விருதும் பெற்றார். இவர் ஏறத்தாழ 7500க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

‘தளபதி’ பாடத்தில் ‘ராக்கம்மா கையைத் தட்டு...’, ‘சத்திரியன்’ படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச...’, ‘சின்னத்தம்பி’ படத்தில் ‘போவோமா ஊர்கோலம்’, ‘நீ எங்கே...’, ‘என் ராசவின் மனசிலே’ படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே...’, ‘காதலன்’ படத்தில் ‘முக்காலா...’, ‘அலை பாயுதே’ படத்தில் ‘எவனோ ஒருவன்...’, ‘பம்பாய்’ படத்தில் ‘குச்சி குச்சி ராக்கம்மா...’, ‘இந்தியன்’ படத்தில் ‘மாயா மச்சிந்ரா...’ போன்றன. இவர் பாடிய பாடல்களுள் பிரபலமானவை. இவர் ஹார்மோனியத்திலும் சிறந்த பயிற்சி பெற்றவராவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக