13 செப்டம்பர், 2010

வடக்கில் மீள்குடியேற்றப்படுள்ள மக்களை இயற்கை அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கவும்:சுரேஷ் எம்.பி.

வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் போதுமானதாக இல்லை.

அந்த மக்கள் தொட ர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வருகின்றனர். எதிர்வ ரும் மாதங்களில் மீண்டுமொரு அனர்த்தத்திற்கு அம்மக்கள் முகம் கொடுக்க நேரிடும்.

அவ்வனர்த்தத்திலிருந்து பாதுகாப்பதற்கு அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மற்றும் முல்லை தீவு மாவட்டங்களில் மீள் குடியேற்றப்பட்ட மக்களில் 90 சதவீதமானவர்கள் இன்னும் தற்காலிக கூடாரங்களிலேயே தங்கவைக்கப் பட்டுள்ளனர். அடிப்படை வசதிகளற்ற அவர்களின் நிலை பரிதாபகரமாகவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தலைமையில் யாழ். செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் சந்திரகுமார் மற்றும் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

யாழ் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அமைச்சர்கள் கருத்துகளை கேட்டறிந்து கொண்டதுடன் அரசாங்கத்தினால் முன்னெடு க்கப்படவி ருக்கி ன்ற எதிர்கால செயற்றிட்டங்கள் தொர்பிலும் தெளிவுப்படுத்தினர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி ,முல்லைத்தீவு பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு அனர்த்தத்தை எதிர்கொள்ளவுள்ளனர் அதற்கு இடர் முகாமைத்துவ அமைச்சு ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

மழை பெய்வதற்குள் அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். தவறினால் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மேலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் தற்காலிக கூடாரங்கள் மற்றும் பொது மண்டபங்களில் தங்கியுள்ளனர்.

போதிய வசதிகளின்றி வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியது அரசாங்கத்தின் பாரிய கடப்பாடாகும் வெறும் கூடாரங்களில் தங்களுடைய வாழ்வை கழித்து கொண்டிருக்கின்ற மக்கள் பல்வேறு சுகாதார சீர்கேடு களுக் கும் முகம்கொடுத்துகொண்டிருக்கின்றனர்.

மழையிலிருந்து மக்களை பாதுகாத்து பொது இடங்களில் தங்கவைப்பதற்கு பாடசாலைகளோ பொது மண்டபங்களோ இல்லை இருக்கின்ற மண்டபங்கள் மற்றும் பாடசாலைகள் கூரைகள் இல்லாமலேயே இருக்கின்றன. அவற்றை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் கல்விசெயற்பாடுகள் கூட தற்காலிக கூடாரங்களிலேயே முன்னெடுக்கப்படுகின்றன மழை பெய்தால் கல்வி செயற்பாடுகளும் பாதிப்படையும் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இடர்முகாமைத்துவ அமைச்சு ஏனைய அமைச்சுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக