13 செப்டம்பர், 2010

ஜனாதிபதி மஹிந்த இவ்வாரம் நியூயோர்க் விஜயம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாரம் நடுப்பகுதியில் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்யவிருக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற விருக்கின்ற ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உச்சிமாநாடு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது. இந்த மாநாட்டில் ஈ மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

ஐக்கிய நாடுகளின் 65 ஆவது பொதுச்சபை அமர்வுகள் நாளை 14 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றன. எதிர்வரும் 20 திகதி சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறும் அந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுவார்.

அமைச்சர்களின் பொது விவாதங்களுக்கான அமர்வுகள் உச்சிமாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும். உச்சி மாநாடடில் ஈ மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் எனும் தலைப்பில் மட்டுமல்லாது காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட நாடுகளின் மீளமைப்பு, பாதுகாப்பு சபை மறுசீராக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக