13 செப்டம்பர், 2010

1312 கைதிகள் நேற்று விடுதலை






சர்வதேச கைதிகள் தினத்தையொட்டி நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1312 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 37 பேர் பெண்களாவர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வீ. ஆர். த சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சிறிய குற்றங்கள் புரிந்து சிறைத்தண்டனை அனுபவித்து வந்தோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டு ள்ளனரெனவும், நேற்றுக்காலை, பல்வேறு சிறைச்சாலைகளிலும் இக்கைதிகள் விடுவிப்பு நிகழ்வு இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட கைதிகள் தினத்தை சிறப்பாக்கும் வகையில் விசேட நிகழ்வொன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற்றது.

பிரதமர் டி. எம். ஜயரத்னவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில்

(நெடுந்தீவு தினகரன், யாழ். விசேட நிருபர்கள்)

கைதிகள் தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 24 கைதிகள் விடுதலையாகி வெளியேறினார்கள்.

16 ஆண்களும் 4 பெண்களும் யாழ். சிறைச்சாலையில் இருந்து சிறை அதிகாரிகளினால் வெளியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

24 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர். இதில் பலாலி, வேலைத்தளத்தில் இருந்து 4 சிங்களவர்களும் அடங்கு கின்றனர்.

சிங்களக் கைதிகள் காலையில் அநு ராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தாகவும் அவர்கள் அநுராதபுரத்தில் இருந்து தமது இடங்களுக்குச் செல்வார் கள் எனவும் சிறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக