23 ஆகஸ்ட், 2010

இலங்கை அகதிகளுடனான அடுத்த கப்பல் தமது நாட்டுக்கு வரலாம்- நியூசிலாந்து.

இலங்கை அகதிகளுடனான அடுத்த கப்பல் தமது நாட்டை நோக்கி வரலாம் என நியூசிலாந்து தெரிவித்துள்ளது. அகதிகள் தற்போது தமது நாட்டை இலக்கு வைத்துள்ளமை தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து ஊடகமொன்றிற்கு அளித்த செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுமார் 490 இலங்கை அகதிகளுடன் எம்.வீ. சன் சீ என்ற கப்பல் கனடாவை அடைந்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன். அகதிகளுடனான பொருட்களை ஏற்றிவரும் அடுத்த கப்பல் சர்வதேச கடற்பரப்பினூடாக தமது நாட்டை அடையலாம் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுவரை காலமும் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவை நோக்கியே அதிகளவான அகதிகள் சென்றுள்ளதாக தெரிவித்த நியூசிலாந்து பிரதமர், அடுத்த அகதிகள் கப்பல் தமது நாட்டை இலக்கு வைப்பதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக