13 ஆகஸ்ட், 2010

மலேசியாவில் கைதான இலங்கை அகதிகளில் 62 பேர் விடுவிப்பு

மலேசிய கோலாம்பூரில் 111 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 75 இலங்கை அகதிகளில் 62 பேரை நேற்று நண்பகல் குடிவரவு திணைக்களம் விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சிய 13 பேர் இன்று விடுவிக்கப்படுவர் என மலேசியாவின் மாற்று நடவடிக்கைக்கான குழுத் தலைவர் வீ. கலைவாணரும் தமிழ் இறைமை இயக்கத்தின் தலைவர் டி.செம்பியனும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியா செல்லும் வழியில், இவர்கள் பயணித்த படகு மலேசிய கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது. மலேசிய கடற்படையினர் இவர்களைக் காப்பாற்றி, பின்னர் கைது செய்தனர்.

இந்நிலையில் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர்களை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்துக்கு அழைத்து சென்று அவர்களுக்கு அகதி அந்தஸ்து அட்டைகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கலைவாணர் தெரிவித்துள்ளார்.

தம்மை மூன்றாம் நாடொன்றில் குடியமர்த்தக் கோரி, இரண்டு மாதங்களுக்கு முன்னர் உணவு தவிர்ப்புப் போராட்டத்திலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக