13 ஆகஸ்ட், 2010

கல்லால் அடித்து கொலை தண்டனையை ஏற்ற ஈரான் பெண்


ஈரானை சேர்ந்தவர் சகினே மொகமதி ஆஷ்தியானி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் கொலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே விதவைப் பெண்ணான ஆஷ்தியானி வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக புகார் கூறப்பட்டது. எனவே, ஈரான் நாட்டு சட்டப்படி அவரை கல்லால் அடித்து கொலை செய்ய கடந்த 2006-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த கொடூர தண்டனைக்கு உலக நாடுகளும், சமூக சேவை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆஷ்தியானிக்கு கடந்த 2006-ம் ஆண்டே 99 சவுக்கடி வழங்கி தண்டனை நிறைவேற்றப்பட்டது. எனவே, அவருக்கு இந்த தண்டனை தேவையில்லை என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் நிர்பந்தத்தினால் ஆஷ்தியானாவின் தண்டனையை நிறைவேற்றாமல் ஈரான் அரசு தள்ளிவைத்து இருந்தது. தற்போது, கல்லால் அடித்து கொலை செய்ய உள்ள தண்டனையை ஏற்றுக்கொள்வதாக ஆஷ்தியானா அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் அரசு டெலிவிஷனில் நேற்று முன்தினம் ஆஷ்தியானாவின் தண்டனை குறித்த ஒப்புதல் வாக்குமூலம் ஒளிபரப்பப்பட்டது. அதில், “என்னை கல்லால் அடித்து கொல்ல நான் சம்மதிக்கிறேன்” என அவர் பேசிய ஒலி மட்டும் ஒளிபரப்பானது.

ஆனால், அவரது வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படவில்லை. அவர் ஈரான் மொழியில் பேசியிருந்தார். எனவே, அவரது தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக