13 ஆகஸ்ட், 2010

பொன்சேகாவை விடுவிக்கக்கோரி காலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் கைது

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரி காலியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார, மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே ஆகியோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காலி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படிருந்தபோதே இவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெனரல் சரப் பொன்சேகாவை விடுவிக்கக்கோரி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் காலி நகரில் ஜனநாயக தேசிய முன்னணியினரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் காலி பஸ் நிலையம் நோக்கி பேரணியாக வர முற்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டதுடன் தடியடிப் பிரயோகத்திலும் ஈடுப்பட்டனர். இதனால் காலி பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டுதாக்குதலில் எம்.பி.க்களான விஜித்த ஹேரத், அர்ச்சுனாரணதுங்க, ஜெனல் பொன்சேகாவின் பாரியாரான அனோமாக பொன்சேகா உட்பட பலரும் பாதிப்புக்குள்ளாகினர்.

தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.பி.க்களான விஜித்த ஹேரத், அஜித் குமார, மற்றும் நளின் கேவகே ஆகியோர் “உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி காரணமாக காலி நகரில் நேற்று மாலை பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் மற்றும் பொலிஸாரின் தாக்குதலையடுத்து காலி நகரின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக