அல்கொய்தா தீவிரவாதிகள் அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன். அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இவரையும், அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளையும் அமெரிக்கா வேட்டையாடி வருகிறது.
ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பாகிஸ்தானில் படைகளை குவித்து அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தலைமறைவாக இருக்கும் பின்லேடனை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. அனால் அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரமும் தெரியவில்லை.
பின்லேடனிடம் சமையல்காரராக பணிபுரிந்தவர் இப்ராகிம் அல்குவாசி. பின்லேடனின் தீவிர விசுவாசி மற்றும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார்.
அல்கொய்தா தீவிரவாதிகளுடன் சேர்ந்து இவரும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். எனவே அவரை அமெரிக்க ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது.
இவர் மீது கவுந்தனோமாவில் உள்ள அமெரிக்க ராணுவ கோர்ட்டில் வழக்கு நடந்தது. வழக்கை ராணுவ “ஜீரிகள்” (நீதிபதிகள்) விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் ஒபாமா பொறுப்பேற்ற பிறகு அல்கொய்தா தீவிரவாதிகள் மீது எடுக்கப்பட்ட மிகப்பெரிய முதல் நடவடிக்கை இது என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக