20 ஜூலை, 2010

ஆதரவின்றி தவிக்கிறோம்: பின்லேடன் மகன்





ஈரானில் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த 20 பேரும் எவ்வித ஆதரவுமின்றி தவிப்பதாக சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன் தெரிவித்துள்ளார்.
ஒமர் பின்லேடன் அல்-அரேபியா தொலைக்காட்சிக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியது: கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் எங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஈரான் அரசால் கைது செய்யப்பட்டோம். அன்று முதல் நிம்மதியான வாழ்க்கையே இல்லை. தொடர்ந்து துன்பத்தையே அனுபவித்து வருகிறோம்.
நாங்கள் எனது தந்தையின் பிறந்த மண்ணான செüதி அரேபியாவுக்கு செல்ல விரும்புகிறோம். எங்களை ஏற்றுக்கொள்ள அந்நாட்டு அரசும் தயாராகவுள்ளது. ஆனால் எங்களுக்கு அடைக்கலம் கொடுக்க செüதி அரசு எங்களைப் பற்றிய உரிய ஆவணங்களை ஈரானிடம் கேட்கின்றது. ஆனால் ஈரானோ இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது சகோதரர் சில தினங்களுக்கு முன்பு போனில் பேசினார். அப்போது தான் அங்கு நரக வாழ்க்கை வாழ்வதாகவும், தன்னை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார்.
இப்படி கஷ்டங்களை அனுபவித்து வரும் எங்களது குடும்பத்துக்கென்று உதவுவதற்கு யாருமில்லை. ஈரானில் நாங்கள் ஆதரவின்றி தவிக்கிறோம் என்று ஒமர் பின்லேடன் தெரிவித்தார்.
2001, செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் அல்-காய்தா தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதை அடுத்து ஒசாமா பின்லேடன் குடும்பத்தார் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் ஈரானில் தஞ்சம் புகுந்த அவர்களை அந்நாட்டு அரசு கைது செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக