18 ஜூலை, 2010

அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு


ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று அமெரிக்காவிலும் இந்தியர்கள் மீது இனவெறி காட்டப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வாஷிங்டனின் மேற்கு மாவட்டத்தில் சம்மர்ஹில் பகுதி உள்ளது. அங்குள்ள பல அடுக்குமாடி வீடுகளில் இந்தியர்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

அதில், குடியிருக்கும் ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்களின் குடும்பத்தினர் மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இந்தியர் குடும்பத்தினர் அவமரியாதை செய்யப்படுகின்றனர்.

உடைந்த வீட்டு உபயோக பொருட்கள், பழைய துணிகள் மற்றும் போர்வைகளை அங்கு அப்புறப்படுத்த கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் தங்களின் குழந்தைகள் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடக்கூடிய அனுமதி இல்லை. இதற்கு இனவெறி தான் காரணம் என இந்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுக்கு மாடி குடியிருப்புகளின் உரிமையாளர்களும், நிர்வாகிகளும் நீங்கள் இந்தியாவுக்கு திரும்பி செல்லுங்கள் என்று கூறி அவமதிப்பதாகவும் கூறுகின்றனர்.

எனவே, தங்களுக்கு நீதி வழங்கக்கோரி வாஷிங்டனில் உள்ள அமெரிக்க மாவட்டக் கோர்ட்டில் அடுக்கு மாடி குடியிருப்பின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே, இனவெறியை சகித்து கொள்ள முடியாது என அமெரிக்காவில் மனித உரிமைகள் ஆணையத்தின் உதவி அட்டர்னி ஜெனரல் தாமஸ் இ பெர்ஷ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக