18 ஜூலை, 2010

ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி மீண்டும் இலங்கை வருகிறார்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே மீண்டும் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இணைப் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள் ளார்.

கொழும்பு ஐ. நா. அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நியூயோர்க் அழைக்கப்பட்டிருக்கும் புஹ்னே, இந்த வாரம் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு கொழும்புக்குத் திரும்புவார் என ஃபர்ஹான் ஹக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக ஐ.நா. பணிகள் தொடர வேண்டும் என்பதாலும், விசேடமாக வடக்கில் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளுக்கு ஒத்துழைக்க

வேண்டுமென்பதாலும் நீல் பூனே மீண்டும் இலங்கை வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஐ. நா. பணிகள் தடையின்றித் தொடர்வற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட செய்தியொன்றையும் அவர் அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்துவார் என்றும் ஹக் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரமாகத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழுவை கலைக்குமாறு வலியுறுத்தி கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டதோடு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. உண்ணாவிரதம் மேற் கொண்டார்.

இதனிடயே கொழும்பில் பணியாற்றிய ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி நீல் பூனேயை செயலாளர் நாயகம் பான் கீ மூன் திருப்பி அழைத்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக