18 ஜூலை, 2010

ஐபா நிகழ்ச்சியை தமிழ்த்திரையுலகம் புறக்கணித்தது சரிதான் - ஏ.ஆர்.ரகுமான்

இலங்கையில் நடைபெற்ற ஐபா நிகழ்ச்சியை தமிழ்த்திரையுலகம் புறக்கணித்தது சரிதான் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதில்லை என்று தமிழ்த்திரையுலகம் முடிவு எடுத்தது சரிதான். மிகவும் உணர்வுப்பூர்வமான விடயங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த முடிவு சரியானதாகவே அமைந்திருக்கும். மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட விஷயம் என ஏ.ஆர். ரகுமான். கருத்து தெரிவித்திருக்கிறார்.

எதிர் வரும் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஐரோப்பாவில் தன்னுடைய இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இதற்காக ஐரோப்பா சென்றிருக்கும் அவர் அங்கே ஊடக நிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவத்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெரும் வரவேற்பை பெற்ற செம்மொழி மாநாட்டு பாடல் சில விமர்சனங்களையும் சந்தித்தது பற்றி கருத்து தெரிவித்த ரகுமான் விமர்சனம் வரும் என்று எனக்கு தெரியும். தமிழ் மொழி மாறிக்கொண்டே இருக்கிறது. 8ஆம் நூற்றாண்டிலேயே இருக்க முடியாது. அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இளைய தலைமுறை, மூத்த தலைமுறை உட்பட 3 தலைமுறைகள் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதை குறை சொல்லக்கூடாது. என்றார்.

டில்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான தீம் பாடலை உருவாக்கும் பணியில் தீவிரமாக இருப்பதாக சொல்லும் ஏ.ஆர்.ரகுமான் பெரிதும் எதிர்பார்க்கப்படும் எந்திரன் திரைப்படத்தின் இசை திருப்திகரமாக வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

உலகப் பொதுமறையாக இருக்கும் திருக்குறளை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதற்கான இசை வடிவத்தை உருவாக்கும் எண்ணத்தில் இருப்பதாக சொன்ன ஏ.ஆர்.ரகுமான் வேலைப்பளு காரணாமாக அந்தப் பணி தள்ளிப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக