வாஷிங்டன்:அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியருக்கு, ஆயுதம் வைத்திருந்த வழக்கில் உள்ளுர் கோர்ட், 15 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. அலபாமா மாநிலத்தில் வசித்து வந்தவர் பட்டேல் என்கிற நரேந்திரகுமார்(45). 2008ம் ஆண்டு மில்லிபாக் பகுதியில் உள்ள அவரது கடையில் அமெரிக்க சுங்கத் துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். அவரது கடையில் இருந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.பட்டேலிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பட்டேல், 1990ம் ஆண்டு அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக வந்து குடியேறி, இதுவரை அமெரிக்க குடியுரிமை பெறாமல் தங்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, பட்டேல் கைது செய்யப்பட்டு மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அமெரிக்க குடியுரிமை ஆவணங்களையும், துப்பாக்கிகள் வைத்திருந்ததற்கான ஆவணங்களையும் ஒப்படைக்க, கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அவர் கோர்ட்டில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினார். இதையடுத்து, அவருக்கு மாவட்ட கோர்ட், 15 மாத சிறைத் தண்டனை விதித்தது.குடியுரிமைத் துறை சார்பிலும், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக