ஆஸ்திரேலியாவில் பிரதமராக இருந்த கெவின்ரூட் கடந்த 3 வாரத்துக்கு முன்பு பதவி விலகினார். அவரை தொடர்ந்து ஜுலியா கிலார்ட் (48) புதிய பிரதமராக பதவி ஏற்றார். இதன்மூலம் ஆஸ் திரேலியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை பெற்றார்.
பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த விரும்பினர். அதைத்தொடர்ந்து அவரது தொழிலாளர் கட்சி கவர்னர் ஜெனரல் குவென்டின் பிரிசை சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்கும்படி சிபாரிசு செய்தனர்.
அதன்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. தேர்தலை வருகிற ஆகஸ்டு மாதம் 21 அல்லது 28-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அகதிகள் பிரச்சினை, பொருளாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவை இந்த தேர்தலில் பிரசாரம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக