23 மே, 2010

வெள்ளம் காரணமாக இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு

மழை,வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை முற்றாக இழந்தவர்களுக்கு நஷ்டஈடாக தலா 50,000 ரூபாவை வழங்கவுள்ளதாகவும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு சேதத்துக்கான கணிப்பீட்டின்படி நஷ்டஈடு வழங்கப்படுமென்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு 97 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகையில் இதுவரை 31 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த நிவாரணத் தொகை போதாதெனக் காணப்படுமானால் மேலும் நிதியை ஒதுக்குவதற்கான ஏற் பாடுகள் செய்யப்படும். இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களின்போது அதிகளவிலான பாதிப் புகளைத் தடுக்கும் பொருட்டு நீண்டகாலச் செயற்றிட்டமொன்றினை விரைவில் அமுல் படுத்தவுள்ளோம்.

நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவுகள் ஏற்படும் அபாய தோன்றியுள்ளது. அதே போன்று அங்குலான பிரதேசத்தில் கடலரிப் பின் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இது வரை அங்குலானப் பகுதியில் 64 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. இதன் காரண மாகப் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாகத் தங்குவதற்கு வீடுகளைப் பெற்றுக் கொள்ளும் படியும் அவர்களை அறிவுறுத்தியுள்ளோம். அதற்கான வாடகையை நாம் செலுத்தவுள் ளோம் எனவும் தெரிவித்துள்ளோம்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக