23 மே, 2010





யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாக சென்று அங்கு வசித்துவரும் இலங்கையர்களை வரவழைத்து அவர்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 110அகதி முகாம்களில் 1லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் அவர்களை நாட்டிற்கு வரவழைப்பதற்கான துரித திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு அவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்க இராணுவம் மற்றும் பொலீசாரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை தமிழகத்திலிருந்து நாடு திரும்பவுள்ள இலங்கை அகதிகளுக்கான உதவிகளை யூ.என்.எச்.சீ.ஆர் என்கிற ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் வழங்கவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இவர்களில் 505பேர் இலங்கை செல்வதற்கான உதவிகளை அவ்வமைப்பு மேற்கொண்டிருந்தது. இதனைத் தவிர கடந்த 2002ம் ஆண்டு சுமார் 26,700அகதிகள் இலங்கை திரும்புவதற்கு அவ்வமைப்பு உதவி வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக