எச் ஆர் டபிள்யு வெளியிட்டுள்ள படம் BBC
இலங்கையில் போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை 'படையினர்' துன்புறுத்திக் கொல்வது போன்ற காட்சிகளைக் காட்டும் புகைப் பட ஆதாரங்களை நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பான ஹூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தை சேர்ந்த ஒருவர் மூலம் இந்த புகைப்படங்கள் தமக்கு கிடைத்ததாக கூறும் ஹூமன் ரைட்ஸ் வாட்சின் தெற்காசிய ஆய்வாளர் மீனாட்சி கங்கூலி, இதில் கொல்லப்படும் நபர் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சார்ந்தவர் என்று பக்கசார்பற்ற வட்டாரங்கள் மூலம் தம்மால் உறுதிசெய்ய முடிந்ததாகத் தமிழோசையிடம் தெரிவி்த்தார்.
இலங்கை அரசு இது போன்ற குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சுயாதீன சர்வதேச விசாரணையை அனுமதிக்க வேண்டும் என்று கூறிய அவர், அப்படி ஒரு விசாரணை நடைபெற்றால் அந்த விசாரணை விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்கள் குறித்தும் விசாரிக்கும் என்றார்.
போர்க் குற்றங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் ஆதாரங்களை தொடர்ந்து நிராகரித்து வரும் இலங்கை அரசு, ஹூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களையும் நிராகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக