23 மே, 2010

மறுசீரமைப்பு யோசனையால் ஐ.தே.கவில் புதிய குழப்பம் ரணிலின் தலைமையைப் பாதுகாக்க மேற்கத்திய நாடுகள் காய்நகர்த்தல்






ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமை ப்புக் குழுவின் பரிந்துரைகளை, செயற்குழு அங்கீகரித்துள்ள போதி லும் அதனை முழுமையாக நடை முறைப்படுத்துவதற்கான சாதகமான சூழல் ஏற்படும் வாய்ப்பு குறை வாகவே காணப்படுவதாக கட்சி வட்டாரங்கள் மூலம் தெரியவருகி ன்றது.

செயற்குழுவின் தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும் போது அக்குழுவிலுள்ள சில உறுப்பினர்கள் மாறுபட்ட நிலைப் பாட்டை எடுக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு ள்ளது. இதனால் குழுக்கள் உரு வாகி பகைமை ஏற்பட்டு கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படாலாமென சிரேஷ்ட உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் செய லாளர், பொருளாளர் தவிர்ந்த (தலைவர் உட்பட) அனைத்துப் பதவிகளையும் ரகசிய வாக்கெடுப் பின் மூலம் தெரிவு செய்ய வேண்டு மென்ற பரிந்துரையை செயற்குழு அங்கீகரித்துள்ளது.

அவ்வாறு தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதாயின் கட்சியின் யாப்பினை மாற்றியாகவேண்டும். அதற்கும் செயற்குழு இணக்கம் கண்டிருந்தாலும் யாப்பை மாற்று வதற்கு 75% ஆதரவு அவசியம் எனக் கட்சியின் தற்போதைய தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள் ளார்.

1995ம் ஆண்டு கட்சியின் யாப்பில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட திருத்தத்தின்படி, தலைவராக இருப் பவர் இராஜினாமா செய்வதன் மூலம் வெற்றிடம் ஏற்படாலொழிய தேர்தல் நடத்த முடியாது.

இந் நிலையில் யாப்பினை மாற்றுவதற்கு 75% ஆதரவு கிடைக்கும் என்பது அந்தளவு சாத்தியமாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ‘வார மஞ்சரி’க்குத் தெரிவித்தார். ஆகவே, கட்சியை மறுசீரமைப்பதென்பது வெறும் சலசலப்பாகவே முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சில மேற்குல நாடுகளின் இராஜதந்திரிகள், ஐ.தே.க. தலைமைப் பதவியிலிருந்து விலகு வதை விரும்பவில்லையெனத் தெரியவருகிறது. எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்குழுவின் மூலம் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் அறிய முடிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக