உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 36 இலங்கைத் தமிழர்களை இந்தியாவில் கேரள மாநில போலீசார் தடுத்து வைத்திருக்கிறார்கள்.
ஐந்து பெண்கள், ஐந்து குழந்தைகள் உள்பட 36 இலங்கைத் தமிழர்களும் தமிழ்நாட்டில் சென்னை நகரில் இருந்து பல்வேறு வழிகளில் கேரள மாநிலம் கொல்லம் நகருக்கு வந்திருக்கிறார்கள்.
ஹோட்டலில் தங்கியிருந்த இவர்களை தமிழக போலீசார் கொடுத்த தகவலின்பேரில் பிடித்துள்ள கொல்லம் போலீசார், என்ன காரணத்துக்காக அவர்கள் அங்கு வந்தார்கள் என விசாரித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய கொல்லம் நகர போலீஸ் கண்காணிப்பாளர் ஹர்ஷிதா அடலூரி, இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை மட்டுமே நடத்தப்படுவதாகவும், அவர்களுக்கு எதிராக சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளோ, ஆவணங்களோ இல்லை என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி, அவர்களிடமிருந்து 2 லட்சம் மூதல் 5 லடசம் ரூபாய் வரை பணம் வசூலித்த சிவா, டெனிஸ் ஆகிய இரண்டு ஏஜென்டுகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் போலீஸ் கண்காணிப்பாளர் ஹர்ஷிதா அடலூரி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக