நியூயார்க்:'பாகிஸ்தானின் வடக்கு வாசீரிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளை விரைவில் ஒழித்துக் கட்டுங்கள்' என, அந்நாட்டு அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக, 'நியூயார்க் டைம்ஸ்' பத் திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் ஸ்டான்லி கிரைஸ்டல் நேற்று முன்தினம் இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானியை சந்தித்துப் பேசினார்.
அப்போது, பாகிஸ்தானின் வடக்கு வாசீரிஸ்தான் பகுதியில் உள்ள அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்ட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு தீவிரமாக எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி, 'கைபர் கணவாய் பகுதியில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை பாக்., அரசு முடித்து விட்டது. அடுத்த கட்டமாக தெற்கு வாசீரிஸ்தானில் அதிரடி வேட்டையை துவக்கியுள்ளது. அதன்பின் வடக்கு வாசீரிஸ்தான் பகுதியில் நடவடிக்கை துவங்கும்' எனத் தெரிவித்தார்.இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவிரவும், 'டைம்ஸ்' பத்திரிகையில், ஜிகாதி பயங்கரவாதிகளுக்கு பணம் மற்றும் ஆயுதங்களைத் தந்து உதவும், 'சூப்பர் மார்க்கெட்' போல பாகிஸ்தான் செயல்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக