கோவை, மே 9: மார்பில் "வேலுப்பிள்ளை பிரபாகரன்' என்று பச்சை குத்தியவர் தாராபுரத்தில் மயங்கி விழுந்து இறந்தார். அவர் விடுதலைப்புலியா, இலங்கை அகதியா என போலீஸக்ஷ்ர் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சாலையோரமாக 45 வயது நபர் வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். கடும் வெயில் காரணமாக அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்பகுதி மக்கள், அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருக்கு நினைவு திரும்பவில்லை. அவரது மார்பில் "வேலுப்பிள்ளை பிரபாகரன்' என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸக்ஷ்ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை பச்சை குத்தி இருப்பதால், இலங்கை அகதியாக இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் உளவுப் பிரிவு விசாரித்து வருகின்றனர்.
இறந்தவரின் புகைப்படத்தை கோவையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளவர்களிடம் காட்டி அடையாளம் காணும் முயற்சியிலும் போலீஸக்ஷ்ர் ஈடுபட்டுள்ளனர்.
இ றந்தவரின் அடையாளம் தெரியாததால், இவர் விடுதலைப் புலியாக இருக்கக் கூடுமோ என்ற கோணத்திலும் க்யூ பிரிவு போலீஸக்ஷ்ர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது, "சாலையில் நடந்து செல்லும்போது இவருக்கு கடும் முடக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சுயநினைவை இழந்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி இறந்துவிட்டார்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக