9 மே, 2010

இலங்கை திரைப்பட விழாவுக்கு அமிதாப்பச்சன் வருவதை யாராலும் தடுக்க முடியாது:





சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழா இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தலைமையில் நடிகர்- நடிகைகள் குழு பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழர்களை அழித்த சிங்கள அரசு துணையுடன் நடத்தப்படும் இந்த விழா வில் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்ளக் கூடாது என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அமிதாப்பச்சன் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் அமிதாப்பச்சன், யாருடைய மன உணர்வும் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளமாட்டேன் என்றார். எனவே கொழும்பு பட விழாவில் அமிதாப்பச்சன் கலந்து கொள்ளமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அமிதாப்பச்சன் திட்டமிட்டப்படி கொழும்பு பட விழாவில் கலந்து கொள்வார் என்று சிங்கள அதிகாரிகள் கூறி வருகிறார்கள். இதை பொருளாதார அபிவிருத்தி மந்திரி லட்சுமண் யாப்பா அயே வர்தன உறுதி செய்துள்ளார்.

கொழும்பு சமுத்ரா ஓட்டலில் நடந்த விழாவில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில் நிச்சயம் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்வார். அவர் வருவதை உறுதி செய்துள்ளார். அவர் வருகையை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக