9 மே, 2010

ராகுல்காந்தி வருகை: 38 இலங்கை தமிழர்கள் கேரளாவில் கைது






இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை பார்வையிட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி அடுத்த வாரம் கேரளா வருகிறார்.

இந்த நிலையில், இலங்கை தமிழர்கள் சிலர் கொல்லம் லாட்ஜில் தங்கியிருப்பதாக தமிழக உளவுத்துறையிடம் இருந்து கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து கொல்லம் அருகேயுள்ள ஒரு லாட்ஜில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு பெண்கள், குழந்தைகள் உள்பட 38 இலங்கை தமிழர்கள் இருந்தனர்.

அவர்களை கைது செய்து கொல்லம் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்கள் இலங்கையில் உள்ள முல்லை தீவை சேர்ந்தவர்கள். கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்ததாக தெரிவித்தனர்.

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொச்சியில் இருந்து செல்ல அங்கு வந்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகளை ஏஜெண்டுகள் சிவா, டென்னிஸ் ஆகியோர் செய்திருந்தனர். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கட்டணம் செலுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து ஏஜெண்டு டென்னிஸ் கைது செய்யப்பட்டான். இவனிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே 50 பேரை ஆஸ்திரேலியா அனுப்பி இருப்பதாக தெரிவித்தான். இந்த தகவலை கொல்லம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹர்ஷிதா அட்ட லூரி தெரிவித்தார். மேலும், இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக