9 மே, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தார்மீகப் பொறுப்பு

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஒத்துழைத்துச் செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்க தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்புக்குக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பிரதிபலிப்பு இன்னும் வெளி வரவில்லை.

இந்த அழைப்பு தொடர்பாகக் கூட்டமைப்புத் தலைமை நிதானமாகச் சிந்தித்துச் சாதகமான முடிவுக்கு வரு வது தான் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இனப் பிரச்சினைக் குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தைத் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

இதேபோல, தமிழ் மக்களின் அபிலாஷை களை முழுமையாகப் பூர்த்தி செய்யும் தீர்வு இன்றைய நிலை யில் சாத்தியமில்லை என்பதையும் கூட்டமைப்புத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த நிலை உருவாகியதில் அவர்க ளுக்குப் பிரதான பங்கு உண்டு.

இப்போது அதையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. பிரச்சினையின் தீர்வுக் காக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சிந்தனையே இன்று அவசியமானது.

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்த வேண் டுமானால் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்.

அதற்கான பலத்தைக் கொண்டிருக்கும் அரசாங்கத்து டன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தைத் தவற விட்டால் மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைப்பது அரிது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் அரசி யலமைப்பைத் திருத்துவதற்கான மூன்றிலிரண்டு பெரும்பான் மையை அரசாங்கம் இலகுவாகப் பெற முடியும்.

எனவே இந் தச் சந்தர்ப்பத்தைக் கூட்டமைப்புத் தலைவர்கள் சரியான முறை யில் பயன்படுத்த வேண்டும். இச் சந்தர்ப்பத்தைத் தவற விடு வது தமிழ் மக்களுக்குச் செய்யும் அநீதியாகிவிடும்.

அரசாங்கம் அதன் ஆலோசனைகளைத் தந்தால் பரிசீலிக்கத் தயார் என்று கூறுவது கூட்டமைப்புத் தலைவர்களுக்கு வழக்கமாகி விட்டுது. தமிழர் விடுதலைக் கூட்டணியாகச் செயற்பட்ட கால த்திலும் இந்த வழக்கம் இருந்தது. இது அக்கறையின்மையின் வெளிப்பாடு.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என் பதில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் வெளியிடக்கூடிய கருத்தாக இது இல்லை. அரசாங்கம் தீர்வு ஆலோசனைகளை முன்வைக்காவிட்டால் தமிழ்ப் பிரதிநிதிகள் எந்தவித அக்கறை யும் இல்லாதிருக்கலாம் என்பதே இக்கருத்தின் உண்மையான அர்த்தம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பதினான்கு உறுப் பினர்களைக் கொண்டிருக்கின்றது. எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகளில் கூடுதலான அக்கறை செலுத்த வேண்டிய தார் மீகப் பொறுப்பு இக் கட்சிக்கு உண்டு. இனப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாகத் தேர்தல் பிரசாரத்தின் போது கூறினார்களேயொழிய அரசாங்கம் ஆலோசனைகளை முன் வைக்காவிட்டால் எதுவும் செய்யமாட்டோம் என்று கூறவி ல்லை.

தங்களைத் தெரிவு செய்த மக்கள் சார்பில் செயற்பட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் களுக்கு உண்டு. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடை முறையைத் துரிதப்படுத்துவதுதான் அம்மக்கள் சார்பிலான பிர தான செயற்பாடு. அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று அரசியல் தீர்வு நடைமுறை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத் துவது அப்பொறுப்பை நிறைவேற்றும் ஆரம்ப நடவடிக்கையாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக