2 மே, 2010

தற்போதைய சூழலுக்கேற்ப அவசரகால சட்டத்தில் திருத்தம்

சபையில் நாளை சமர்ப்பிக்க அரசு தீர்மானம்; அமைச்சர்கள், ஆளும் தரப்பு எம்.பிக்களுக்கு ஜனாதிபதி விளக்கம்தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அவசரகால சட்டத்திலுள்ள சில சரத்துக்களில் திருத்தங்களைச் செய்து நாளை 4ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆளுங் கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், ஆயுத விடயங்கள் மற்றும் காலத்துக்குத் தேவையான சில ஷரத்துக்களுடன் மட்டுமே இம்முறை அவரசரகால சட்டம் விவாதத்திற்கு உட்படுத்தவுள்ளது. நாளையும் நாளை மறுதினமும் இதன் மீதான விவாதம் இடம்பெற்று வாக்களிப்புக்கு விடப்படு மென அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கி ன்றன. பாராளுமன்றம் நாளை 4ம் திகதி கூடுவதை முன்னிட்டு ஆளும் கட்சி பாராளுமன்றக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் டி. எம். ஜயரட்ன உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், எம்.பிக்கள், கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் அவசரகாலச் சட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன.

பாராளுமன்றத்தில் வாய் மூல விடைக்களுக்கான வினாக்கள் வேளையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதிலளிக்க வேண்டுமென்ற பணிப்புரையை ஜனாதிபதி இங்கு விடுத்துள்ளார்.

இதன்கென அமைச்சர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நாட்களில் 9.30 மணிக்கு சபைக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். நேற்றைய இந்த ஆளுங் கட்சிப் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது அமைச்சுக்களின் வாகனங்களை ஒப்படைத்தல் சம்பந்தமாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

முன்பிருந்த அமைச்சுக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சுக்களுக்குப் பாரமளிக்க வேண்டிய வாகனங்களை இதுவரை ஒப்படைக்காமலுள்ளன. இவற்றை விரைவாக ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். வாகனங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் புதிய அமைச்சுக்க ளுக்குத் தேவைப்படும் வாகனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித் துள்ளார். இதற்கிணங்க வாகனங்களை ஒப்படைப்பதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். நேற்றைய இக் கூட்டத்தின் போது பாராளுமன்றத்திற்கான புதிய சபைத் தலைவர் மற்றும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக