வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசாங்கம் முன்வைக்க தீர்வுயோசனை குறித்து சிறுபான்மை கட்சிகள் மற்றும் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசியல் சம்பந்தமற்ற சகல இனங்களும் அங்கம் வகிக்கும் புத்திஜீவிகள் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்தின் இத்தீர்மானம் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பூட்டான் திம்பு நகரில் வைத்து, இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிடம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய - இலங்கை தலைவர்களிடையில் அங்கு அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை விரிவுப்படுத்துவது, செனட் சபையை அமைப்பது, செனட் சபையின் பணிகள், வடக்கு கிழக்கு பிராந்தியத்தின் புனரமைப்பு பணிகள் மற்றும் மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் மாத்திரமல்லாது, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவிருப்பதாக ஜனாதிபதி, இந்திய பிரதமரிடம் இதன்போது தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக