2 மே, 2010

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாசவின் ஞாபகார்த்த தினம்-





காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாசவின் 17வது ஞாபகார்த்த தினம் நேற்று . முன்னாள் ஜனாதிபதியின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு நாட்டின் பல இடங்களிலும் விசேட நிகழ்வுகளும் சமய அனுஸ்டானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரதான ஞாபகார்த்த நிகழ்வு கொழும்பு புதுக்கடை பிறேமதாச உருவச்சிலைக்கு அருகாமையில் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பமாக இரண்டுநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொழும்பு மாநகரசபையின் பிரதம நிர்வாகி உமர் காமில் ரணசிங்க பிறேமதாசவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர், பிரதித் தலைவர், பிறேமதாச குடும்பத்தினர், அரசியல்வாதிகள் என பலரும் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் அரசியல்வாதிகள் பிறேமதாச குடும்பத்தினர் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டிருந்தனர். ரணசிங்க பிறேமதாச 1993ம் ஆண்டு கொழும்பு, ஆமர்வீதியில் மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தபோது இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக