2 மே, 2010

வட.முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக்குடியேறுவதையே இலக்காககொண்டுள்ளனர்:றிசாத் பதியுதீன்



வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீள்குடியேறுவதையே இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அபிவிருத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் அதனை அடைந்த கொள்வதற்கான ஆக்க பூர்வமான பணிகளை ஜனாதிபதி முன்னெடுப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

புத்தளம் புளிச்சாக்குளம் ஹிஜ்ரத்புரம் இடம் பெயர்ந்த மக்கள் வசிக்கும் கிராமத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு பேசுகையில் கூறியதாவது :-

"கடந்த 2004 ஆம் ஆண்டு வன்னி மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு இருந்த ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் தற்போது இரண்டாக அதிகரித்துள்ளது.ஜனாதிபதியின் மீதும்,எம் மீதும் மக்கள் கொண்ட நம்பிக்கையால் அதனை அடைய முடிந்தது.

தேர்தல் காலங்களில் பிரிந்து நின்றவர்கள்,அதனைவிடுத்து தற்போது மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளுக்காக ஒன்றுபட வேண்டும்.எமக்குள் பிரச்சினைகளும்,பிளவுகளும்; தேவையில்லை நாம் ஒன்றுபட்டு எமது இலக்கை நோக்கிய பயணத்தில் ஒன்றுபடுவோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக