8 மார்ச், 2010

கடற்கொள்ளையர்களுடன் பேச்சு நடத்த லண்டன் அதிகாரி ஜித்தா பயணம்


சரக்குக் கப்பல் ஒன்றை இலங்கை மாலுமிகளுடன் கடத்திய கடற்கொள்ளையர்கள் மற்றும் சவூதி அரேபிய நிறுவனத்துக்கு மிடையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முயலும் நோக்கத்துடன் லண்டனில் நிலைபெற்றுள்ள காப்புறுதி நிறுவனம் ஒன்றின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று ஜித்தா சென்றுள்ளார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த திங்கட்கிழமை ஏடன் வளைகுடாவில் வைத்து கடத்தப்பட்ட சவூதி அரேபிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பலில் இருந்த 14 சிப்பந்திகளில் 13 பேர் இலங்கையராவர்.

கப்பலில் சிப்பந்திகளுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று கடல் கொள்ளையர்கள் கூறியுள்ள போதிலும் அவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

எனினும் காப்புறுதி நிறுவன அதிகாரியின் வருகையை அடுத்து சாதகமான நிலை ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் கவுன்ஸிலர் நாயகமான சபாருல்லாகான் கூறியுள்ளார்.

கடற்கொள்ளையருடன் செய்மதி தொலைபேசி மூலம் கப்பலுக்கு சொந்தமான சவுதி அரேபியன் நிறுவனம் தொடர்புகொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சோமாலிய கடற் பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலை விடுவிக்கக் கடற்கொள்ளையர்கள் 20 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை கப்பமாக கோரி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக