நியூயார்க்,மார்ச்7: அமெரிக்காவில் பொருளாதாரம் மீட்சி பெற ஆரம்பித்திருந்தாலும் வங்கிகள் திவாலாவது தொடர்கிறது. இந்த ஆண்டு இதுவரையில் 26 வங்கிகள் திவாலாகிவிட்டன.
ஜனவரி மாதம் 15 வங்கிகளும் பிப்ரவரி மாதம் 7 வங்கிகளும் இந்த மாதம் 5-ம் தேதி ஒரே நாளில் 4 வங்கிகளும் திவாலாகிவிட்டதாக அறிவித்துவிட்டன.
2008 செப்டம்பர் மாதம் லெமான் பிரதர்ஸ் என்ற நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவித்தபோது உலகமே அதிர்ந்தது. அமெரிக்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் நடைபெறும் வால் ஸ்ட்ரீட்டிலேயே தலைமையகத்தைக் கொண்டிருந்த லெமான் பிரதர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வங்கியாக உலகின் நிதி வட்டாரங்களில் கருதப்படுவது. அந்த நிறுவனமே திவால் என்று அறிவித்தபிறகு ஏராளமான நிதி நிறுவனங்கள் திவால் நோட்டீஸ் கொடுத்து வருகின்றன.
வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதில் அடக்கம்.
சென்டினியல் பேங்க், வாட்டர் ஃபீல்ட் பேங்க், பேங்க் ஆஃப் இல்லினாய்ஸ், சன் அமெரிக்கன் பேங்க் ஆகியவை மார்ச் மாதம் 5-ம் தேதி திவால் நோட்டீஸ் கொடுத்தன.
இந்த நாலு வங்கிகள் திவாலானதால் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு 30.48 கோடி டாலர்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் வேலையற்றோர் எண்ணிக்கை 9.7% என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்திலும் இதே எண்ணிக்கையில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக