8 மார்ச், 2010

நிரூபாமா ராவ்-புளொட் சித்தார்த்தன் சந்திப்பு!




இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு செயலர் நிரூபாமா ராவ் அவர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் தூது குழுவினருக்கும் நிருபாராவ் இடையிலான சந்திப்பு இன்றையதினம் இந்திய தூதுரகத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ் சந்திப்பில் கலந்து கொண்ட புளொட் தூதுக்குழுவினர் வன்னியில் மிகவும் துன்பங்களை அனுபவித்துவரும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யக்கூட முடியாத நிலையில், பல்வேறு உதவிகளை கடந்த காலங்களில் இந்தியா வழங்கியுள்ளது அதற்கு நன்றி தெரிவித்துள்ள புளொட் தூதுக்குழு, தமது தேவைகளை தாமே ப+ர்த்தி செய்யக்கூடிய விதத்தில் அவ் மக்களுக்கான துவிச்சக்கர வண்டிகள், நீர் இயந்திரங்கள், உழவு இயந்திரங்கள் என்று அவை தேவையாகவுள்ளதாகவும் அவற்றை இந்தியா உதவி செய்ய முன்வர வேண்டும் என்று புளொட் தூதுக்குழு கோரியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டுள்ள நிரூபாமா ராவ் அவை கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து தமிழ்கட்சிகளிடையே ஒர் ஒற்றுமையில்லை என்பதை தெரிவித்து கொண்ட நிரூபாமா ராவ் தமிழ் கூட்டமைப்பு திம்பு கோட்பாடு என்றும், இந்திய மாதிரியான அரசியல் தீர்வு என்று ஆனந்தசங்கரி தலைமையிலான த.வி.கூ.யும், 13வது திருத்தம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், சமஷ்டி என்று நீங்களும் தெரிவித்து வருகின்றீர்கள் இது விடயத்தில் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு நிலைக்கு வரவேண்டும் என்று நிரூபாமா ராவ் தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த புளொட் தூதுக்குழு நாங்கள் தமிழ்மக்களின் தீர்வு விடயத்தில் நாங்கள் ஒன்றுபட்டு செயற்பட தயாராகவே உள்ளோம். அந்த நிலை உருவாகுவதற்கு இது உகந்த தரணமல்ல, தற்போது தேர்தல் காலம் தேர்தலில் கட்சிகள் தீவிரமாக செயற்பட்டு கொண்டுள்ளன. தேர்தலினை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வு விடயத்தில் இணைந்து செயற்படுவதற்கு நாம் என்றுமே ஒருங்கிணைந்து செயற்படுவோம் என்பதை நிரூபாமா ராவ் அவர்களிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதையும் புளொட் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக