8 மார்ச், 2010

பிரான்ஸ் கடற்படை அதிரடி நடவடிக்கை : 35 கடற்கொள்ளையர் கைது


பிரான்ஸ் கப்பற்படை, கடற்கொள்ளையர்களைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தியதில், கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் இந்திய பெருங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களைக் கடத்தி வருகின்றனர். அவற்றைச் சிறை பிடித்துச் செல்லும் அவர்கள் பெரிய அளவில் பிணைத்தொகை பெற்றுக் கொண்டு அக்கப்பலை விடுவிக்கின்றனர்.

இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, ஐரோப்பிய யூனியன் கடந்த 2008ஆம் ஆண்டு அட்லாண்டா மிஷன் என்ற அமைப்பை உருவாக்கியது.

அவர்கள் கடல் பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர். இவர்களுடன் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படை அமைப்பும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பிரான்ஸ் கப்பற்படை, கொள்ளையர்களைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தினார்கள். அப்போது கப்பலைக் கடத்த முயன்ற 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக