8 மார்ச், 2010

பொதுத் தேர்தலில் 85 வீதமான முஸ்லிம்கள் ஐ. ம. சு. முன்னணிக்கு வாக்களிப்பர்


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 85 வீதமான முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்க உள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தவறான பிரசாரம் காரணமாக முஸ்லிம்கள் எதிர்தரப்பிற்கு வாக்களித்த போதும் இம்முறை மக்கள் உண்மை நிலையை உணர்ந்து ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தெரிவித்தார். ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலா ளர் மாநாடு நேற்று (08) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி 2/3 பெரும் பான்மை பலத்தை பெறுவது உறுதி. இந்த வெற்றிக்கு முஸ்லி ம்கள் அதிக பங்களிப்புச் செய்ய உள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் உரு வாகியுள்ளது. எனவே இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணிக்கு வாக்களிக்க முஸ்லிம் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். (ர-ஜ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக