நாட்டின் தலைவரான ஜனாதிபதியின் வழியிற் சென்றால் மட்டுமே நாம் ஏனைய ஆசிய நாடுகளைப் போன்று பொருளாதாரத்தில் துரித வளர்ச்சி காணமுடியும் என மத்திய பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
கண்டி அங்கும்புர பொலிஸ் பிரிவில் தற்காலிக பொலிஸ் நிலையம் ஒன்றை நேற்று திறந்து வைத்த பின் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
தென்கிழக்காசிய நாடுகள் சில துரித அபிவிருத்தி அடைய அந்நாட்டுத் தலைவர்கள் காரணமாயிருந்தனர். இதே விதமாக எமது நாடும் பொருளாதாரத் துறையில் துரித வளர்ச்சி காணவேண்டுமாயின் நாம் அனைவரும் ஜனாதிபதியின் வழியில் செல்லவேண்டும்.
நாட்டின் தலைவர் செல்லும் வழியில் பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் செல்வது அத்தியாவசியமாகும்.
உள்நாட்டு யுத்தத்தில் வெற்றி கண்ட போதும் பொருளாதாரத்துறையில் இன்னும் வெற்றி காண வில்லை. பொருளாதார அபிவிருத்தியை நாம் துரிதமாக அடைய வேண்டியுள்ளது.
எமக்கு இன்று திறமையான தலைமைத் துவமொன்று உண்டு. சிங்கப்பூர், ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் துரித பொருளாதார அபிவிருத்தியை அடைய காரணமாக இருந்தது அந்நாட்டுத் தலைவர்களின் விடா முயற்சி அயராத உழைப்பு என்பனவாகும்.
எமக்கும் தற்போது பலமான தலைமைத்துவமொன்று உள்ளது. ஆகவே எமது பொருளாதாரத்தை துரிதமாக முன்னேற்றுவதற்கு தலைவர் வழியிற் செல்லவேண்டும். ஆந்த அடிப்படையில் பொலீஸ் அதிகாரிளும் நாட்டின் தலைவர் காட்டும் வழியில் செல்வது அவசியமாகுமெனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக