யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்க இனிவரும் காலங்களில் படைத் தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள். இதன் ஒரு பகுதியாக வடமராட்சியில் 9ம் திகதி இரண்டாம் கட்டமாக ஆறு கிராம அலுவலர்கள் பிரிவுகளின் மக்களின் மீள்குடியமர்வு இடம்பெறும் என யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கூறினார். உலக அஞ்சல் தினத்தையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் மேலும் பேசும்போது,
இருபது வருடங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவுள்ளனர். உயர்பாதுகாப்பு வலயமான வலிகாமம் வடக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் தமது சொந்த மண்ணில் குடியேற வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்காக யாழ் தலைமையக படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நடவடிக்கை மேற் கொண்டுள்ளார் எனவும் அரச அதிபர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக