ஜனாதிபதி பதவியை மக்களுக்கு நெருக்கமானதாக்குவோம்
1978 அரசியலமைப்பின் 17வது திருத்தச் சட்டத்திலுள்ள சர்வாதிகாரத் தன்மையை நீக்குவதற்காகவே நாம் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரவுள்ளோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதன் மூலம் பாராளுமன்றத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதுடன் ஆறு வருடத்திற்குப் பின் தேர்தலில் போட்டியிடலாமென தெரிவித்த ஜனாதிபதி, பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவே இதனைச் செய்வதாக கூறப்படும் கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் தெரிவித்தார்.
ஜே.ஆர். ஜயவர்தன ஏற்படுத்திய அரசியலமைப்பேயன்றி இது எம்மால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பல்ல என குறிப்பிட்ட ஜனாதிபதி, பாராளுமன்ற த்திற்கு அதிகாரம் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.
எமக்குத் தெளிவான, நீண்ட பயணம் உள்ளது. மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் உள்ளன. அரசியலமைப்பு விடயத்தை காரணங்காட்டிக் கொண்டு நாம் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய கடமையைத் தட்டிக்களிக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பதுளையிலுள்ள ஊவா மாகாண சபைக் கட்டடத்தில் நடைபெற்ற ஊவா மாகாண பெளத்த மத மாநாட்டிற்குத் தலைமை வகித்து நாட்டின் நிலைவரங்கள் தொடர்பாக மதத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண முதல்வர், மாகாண அமைச்சர்கள் உட்பட முக்கியஸ் தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இம் மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
ஊவா மாகாணத்தைப் போன்றே பல்வேறு பிரதேசங்களிலும் பிரச்சினை.
அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர் களை நியமிப்பது அரசியல் கட்சித் தலைவர்களே. அவ்வாறானவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று வருபவர்களல்ல. குற்றம் செய்த பொலிஸ் அதிகாரியொருவரை இடமாற்றம் செய்வதற்குக் கூட தற்போதைய அரசியலமைப்பில் அதிகாரமில்லை. அதனால்தான் நாம் பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரத்தையும் பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறோம்.
ஜனாதிபதி பதவியை மக்களுக்கு மிக நெருக்கமானதாக்கு வோம் என நாம் கடந்த தேர்தலின் போது மக்களுக்கு கூறினோம். அதற்கேற்பவே நாம் பாராளு மன்ற அதிகாரத்தைப் பலப்படுத்துவதுடன் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஜனாதிபதி பாராளுமன்றத்துக்குச் சென்று வர வழிவகுப்போமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவிக் காலத்தை நீடிப்பது தமது நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆறு வருடத்தின் பின் தேர்தலில் நின்று மக்கள் நிராகரித்தால் அதனை நாம் ஏற்போம் எனவும் மேலும் தெரிவித்தார். பெளத்த மதத் தலைவர்களின் வேண்டு கோள்களை செவிமடுத்த ஜனாதிபதி அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக