6 செப்டம்பர், 2010

முன்னாள் புலி உறுப்பினர்கள் 508 பேர் விடுதலை



அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களான 508 இளைஞர், யுவதிகள் இன்று பெற்றோரிடம் கையளிக்கப்பட்டார்கள்.

வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறை மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு பிரதி அமைச்சர் விஜித முனி சொய்சா கலந்து கொண்டார்.

508 பேரையும் அவரவர் பெற்றோரிடம் பிரதி அமைச்சர் ஒப்படைத்தார். விடுதலை செய்யப்பட்ட வர்களில் 246 பேர் அண்மையில் இடம் பெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் ஆவர்.

விடுவிக்கப்பட்டவர்களில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் மணம் முடித்து வைக்கப்பட்ட 50 தம்பதிகளும் அடங்குகின்றார்கள். இராணுவத்தினரிடம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 11 ஆயிரம் பேர் சரண் அடைந்திருந்தார்கள் என்றும் இன்னமும் 7500 பேர் வரையில் விடுவிக்கப்படாமல் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் குற்றச் செயல்களில் முன்பு ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் ஏனையோர் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் பிரதி அமைச்சர் விஜித முனி சொய்சா அங்கு தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக