14 ஆகஸ்ட், 2010

தேடப்படுவோர் பட்டியலிலிருந்து நீக்குமாறு டக்ளஸ் கோரிக்கை

தேடப்படுவோர் பட்டியலில் இருந்து தன்னை நீக்குமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில், இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவருடன் சென்றிருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் 3 குற்றப்பிரிவு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரைக் கைதுசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

டக்ளஸ் தேவானந்தாவை கைதுசெய்ய 16 ஆண்டுகளாக எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் எனவே அண்மையில் இந்தியா வந்த அவரை கைதுசெய்யக் கோரியும் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தன்னைத் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்குமாறு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக