14 ஆகஸ்ட், 2010

"இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்.

"இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். அங்கு செல்லும் அமெரிக்கர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, அமெரிக்க நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியா, பாகிஸ்தான் உட்பட தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் உள்ள அமெரிக்க அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் மீதும், இந்த நாடுகளில் அமெரிக்கர்கள் அடிக்கடி வந்து செல்லும் இடங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக எங்களுக்கு தொடர்ந்து ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதற்கான அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளது. மேலை நாட்டவர்கள் அதிகம் வந்து செல்லும் பொது இடங்கள், மக்கள் நிறைய பேர் கூடும் ஓட்டல்கள், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள், மார்க்கெட்கள், சினிமா தியேட்டர்கள், மசூதிகள் மற்றும் உணவகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதனால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள், அங்கு தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

அல்-குவைதா, தலிபான், லஷ்கர்-இ-தொய்பா உட்பட பல பயங்கரவாத அமைப்புகளை, அன்னிய நாட்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்து, அவற்றுக்கு தடை விதித்துள்ளது. அந்த அமைப்புகளால் அமெரிக்கர்களுக்கு ஆபத்து நேரலாம்.இவ்வாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக