14 ஆகஸ்ட், 2010

ஜீஎஸ்பியை நீடிக்க இன்னமும் சந்தர்ப்பம் உள்ளது : ஐரோப்பிய ஒன்றியம்

ஜீ.எஸ்.பி. வரிச் சலுகைத் திட்டத்தை நீடித்துக் கொள்வதற்கு இலங்கை அரசுக்கு இன்னமும் சந்தர்ப்பம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் இடைநிறுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசாங்கம் காத்திரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக இழக்கப்படவில்லை என ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் சாவெஜ் தெரிவித்துள்ளார்.

சலுகைத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதன் பின்னரும் இலங்கை பேச்சுவார்த்தைகளைத் தொடர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகள் இன்னமும் மூடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை, ஊடக சுதந்திரம் உள்ளிட்ட 15 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை தொடர்ச்சியாக வழங்க முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் காலக்கெடு விதித்திருந்தது.

எவ்வாறெனினும் இந்தக் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக