பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு நாடு வெற்றி பெற வேண்டுமெனில், வெளிநாட்டு ராணுவ உதவியை சார்ந்திருக்கக் கூடாது. தங்கள் நாட்டு ராணுவத்தை பயன்படுத்தியே பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட வேண்டும்' என, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் கூறியுள்ளார்.இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு நடந்த விழாவில் அவர் பேசியதாவது:விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை வெற்றி பெற்றது. புலிகளுக்கு எதிரான சண்டையில் எங்கள் ராணுவத்தையே பயன்படுத்தியது தான் இதற்கு முக்கிய காரணம். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு நாடு வெற்றி பெற வேண்டுமானால், வெளிநாட்டு ராணுவ உதவியை அந்த நாடு சார்ந்திருக்கக் கூடாது.உள்நாட்டு பயங்கரவாதிகளை எதிர்க்க, வெளிநாட்டு ராணுவத்தை ஈடுபடுத்தினால், மக்களிடையே அதற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்காது. ஆனால், உள்நாட்டு ராணுவத்தை பயன்படுத்தினால், மக்கள் அதை வரவேற்பர். இது மக்களின் பொதுவான மனநிலை. அரசுகள் அதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு பெரிஸ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக