14 ஆகஸ்ட், 2010

உரிய காரணம் தெரிவித்தால் அகதி அந்தஸ்து : கனேடிய அமைச்சர்

எம்வி சன் சீ கப்பலில் வந்த இலங்கை அகதிகள் உரிய காரணங்களைக் கொண்டிருந்தால்அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர் என கனேடிய பொதுமக்கள நலன் துறை, பாதுகாப்பு அமைச்சர் விக் டோவிக் தெரிவித்துள்ளார்.

சன் சீ கப்பல் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சென்றடைந்துள்ள அகதிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இன்னும் ஒரு வார காலத்தில் இந்தப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சன் சீ கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்படைத்தளத்திற்கு வழிநடத்திச் செல்லப்பட்டது.

இந்நிலையில் அதில் பயணித்த 490 பேரின் சுகாதார நலன் குறித்த விடயங்கள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைகளின் பின்னர் உரிய காரணங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர் என பொதுமக்கள நலன் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் கப்பலில் சென்றவர்களில் சிறு தொகையினரே நோய்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு விரைவில் அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக