11 ஏப்ரல், 2010

நிவாரண கிராமங்களில் சீரான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என பொய்யான தகவல்




வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ்



இடம்பெயர்ந்த மக்கள் தங்கியு ள்ள செட்டிகுளம் நிவாரண கிராமங்களில் குடிநீர் விநியோகம் சரியான முறையில் நடைபெறுகின்றது.

அதில் எந்தவித குறைபாடுகளும் இல்லை என வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். தனது அதிகாரிகளை அனுப்பி நிவாரண கிராமங்களுடைய தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஆராய்ந்தபோது குடிநீருக்குத் தட்டுப்பாடு இல்லை என அறிக்கை வந்துள்ளது என கூறினார்.

பொதுத் தேர்தலின் பின்னர் இங்கு குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என வெளியான தகவல்கள் முற்றுமுழுதாக பொய்யானது என குறிப்பிட்ட அரச அதிபர், செட்டிகுளம் நிவாரண கிராம ங்களில் இன்னமும் சுமார் 70 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப் பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களிலும் மேலும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய பழைய இடங்களுக்கு திரும்புவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக