11 ஏப்ரல், 2010

அரசியல் தீர்வுக்குப் பொருத்தமான சந்தர்ப்பம்




தேர்தல் முடிவுகள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைத் தோற் றுவிப்பனவாக உள்ளன. நாட்டின் சகல பகுதிகளும் திரு ப்திகரமான முறையில் அபிவிருத்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. வெளிநாட்டு அழுத்தங்களுக்குப் பணி யாது இலங்கை தலைநிமிர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கை தோன்று கின்றது.

இதுவரை தீர்வின்றி இழுபடும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடைமுறையை ஆரம்பிப்பதற்குச் சாதகமான சூழ் நிலை உருவாகும் என்ற நம்பிக்கை தோன்றுவதற்கும் இடமுண்டு.

இனப் பிரச்சினைக்கான தீர்வு இதுவரை சாத்தியமாகாததற்கு வெவ்வேறு தரப்பினர் வெவ்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். ஆனால், உண்மையான காரணங்கள் யாவை என்பது பற்றிய தெளிவு ஏற்ப டும் போது தான் தீர்வு முயற்சி பலனளிப்பதாக அமையும்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் சரியான அணுகுமுறையைப் பின்பற்றத் தவறியமை பிரச்சினை தீராதிருப் பதற்கான காரணங்களுள் பிரதானமானது எனக் கூறலாம்.

முழுமை யான தீர்வை ஒரே தடவையில் பெறுவதற்கு முயற்சிப்பதா அல் லது கிடைக்கும் அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு மேலதிக அதி காரங்களுக்காகத் தொடர்ந்து முயற்சிக்கும் அணுகுமுறையைப் பின் பற்றுவதா என்பதையிட்டு நிலையான நிலைப்பாட்டைக் கொண்டி ருக்கவில்லை.

இரண்டாவது அணுகுமுறையை ஒரு கட்டத்தில் தமிழ்த் தலைமை பின்பற்றியது. ஜே. ஆர். ஜயவர்த்தனவின் அர சாங்கம் வழங்கிய மாவட்ட சபையை ஏற்றார்கள். கிடைக்கும் அதி காரங்களை ஏற்றுக்கொண்டு மேலதிக அதிகாரங்களுக்காகத் தொட ர்ந்து முயற்சிக்கும் நோக்கத்துடனேயே அதை ஏற்றார்கள்.

ஆனால் அந்த அணுகுமுறையை இப்போது அவர்கள் கைவிட்டிருப்பது பிரச்சினையின் தீர்வுக்குத் தடையாக இருக்கின்றது. பதவியிலுள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் வெளிநாட்டு சக்தி கள் மூலம் தீர்வைப் பெறலாம் என்ற அடிப்படையில் செயற்பட்ட மையும் தீர்வைச் சாத்தியமற்றதாக்கிய இன்னொரு காரணம்.

நாட்டில் பேரினவாதிகளின் குரல் முன்னரிலும் பார்க்க இப்போது ஓங் கியிருப்பதும் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலையைத் தோற்றுவிக்கின் றது. இவ்வாறான சூழ்நிலைக்கு மத்தியில் தீர்வு முயற்சியை முன் னெடுப்பதிலேயே தமிழ்த் தலைமையின் கெட்டித்தனம் தங்கியிருக் கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியாயமான தீர்வுக்குச் சாதகமான நிலை ப்பாட்டைக் கொண்டிருப்பவர். சிங்கள மக்களில் மிகப் பெரும்பா ன்மையானோர் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருப்பவர்.

முன்னைய தீர்வு முயற்சிகளின்போது அன்றைய ஆட்சித் தலைவ ர்களுக்குப் பெரும்பாலான சிங்கள மக்களின் ஆதரவு இல்லாதிருந் தமை அம்முயற்சிகளை முன்னெடுக்க முடியாமற் போனதற்கு ஒரு காரணம். இப்போது அந்த நிலை இல்லை.

எனவே தமிழ் தலை வர்கள் அரசியல் தீர்வுக்குப் பொருத்தமான இச்சந்தர்ப்பத்தைச் சரி யான முறையில் பயன்படுத்த வேண்டும்.

நீண்ட காலமாகத் தீர்வின்றியிருக்கும் பிரச்சினையாக இனப் பிரச் சினை இருக்கின்றது. நாடு சுதந்திரம் அடையும்போதே இப்பிரச் சினை இருந்தது. அறுபது வருடங்கள் கழிந்த நிலையிலும் இன் னும் இனப் பிரச்சி8னை தீரவில்லை. தமிழ் மக்களைப் பிரதிநிதித் துவப் படுத்தியவர்கள் நிச்சயமாக இதற்குப் பொறுப்பேற்க வேண் டும்.

இந்த நிலையில், இன்றைய தலைவர்கள் இதை ஒரு சவாலாக எடுத்துப் பிரச்சினையின் தீர்வுக்காக ஆக்கபூர்வமான முறையில் செயற்பட முன்வருவார்களென நம்புகின்றோம்.

ஒரே தடவையில் தீர்வை அடைவதற்குச் சாதகமான சூழ்நிலை இப் போது இல்லை என்பது எல்லோரும் அறிந்ததே.

எனவே, என்னெ ன்ன அதிகாரங்கள் இப்போது சாத்தியமோ அவற்றைப் பெற்றுக் கொண்டு மேலதிக அதிகாரங்களுக்காகத் தொடர்ந்து முயற்சிக்கும் நடைமுறை தான் முழுமையான தீர்வை அடைவதற்கான வழி. தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரக்கூடியதும் இந்த நடைமுறையே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக