11 ஏப்ரல், 2010

இந்திய கடற்படை கப்பல் திருமலை துறைமுகத்தில்





இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘மாகர்’ என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும், இரு கடற் படைகளுக்கும் இடையிலான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடனேயே இந்தக் கப்பல் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இங்கு வந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

மாகர் கப்பலின் கெப்டனான கொமாண்டர் சிமோன் மத்தாயிஸ் தலைமையில் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலை, இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

கடற்படையின் கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கொழம்பகே இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

மாகர் என்ற இந்தக் கப்பல் யுத்தத் தாங்கியும் ஹெலிகொப்டர்களும் நிறுத்தக் கூடிய வசதிகளைக் கொண்டது. 125 மீற்றர் நீலமான இந்தக் கப்பலில் 5 ஆயிரத்து 700 தொன் பொருட்களை ஏற்றலாம். 20 அதிகாரிகளும், 235 பணியாளர்களும் இந்தக் கப்பலில் சேவையாற்றி வருகின்றனர்.

இந்தக் கப்பல் இங்கு சில நாட்களுக்கு நங்கூறமிட்டிருக்கும். இக்கப்பலில் இலங்கை கடற்படை அதிகாரிகள் நூறு பேர் பயிற்சி பெறவுள்ளனர்.

கப்பல் ஓட்டுதல், தொலைத் தொடர்பு, கப்பல் ஓட்டும் முறை, கப்பல் திருத்தும் முறை மற்றும் தீ அணைக்கும் முறை போன்ற பயிற்சிகள் வழங்கப்படவு ள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக