ஆப்கானிஸ்தானில்
தலீபான்களின் பகுதியை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியது
தலீபான்களின் பகுதியை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியது
ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்டு மாநிலம் தலீபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மாநிலத்தில் மர்ஜா பகுதியில் செல்வாக்கு செலுத்தி வந்த தலீபான்களை அடித்து விரட்டுவதற்காகவும் அந்த பகுதியை கைப்பற்றுவதற்காகவும் அமெரிக்கா தலைமையிலான ராணுவம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கையில் அமெரிக்க ராணுவம் வெற்றி பெற்றது. அது மர்ஜா பகுதியை கைப்பற்றியது. அங்கு அப்துல் ஜாகிர் ஆர்யன் உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதோடு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டு ராணுவ படையின் கொடியும் ஏற்றப்பட்டது.
கொடி ஏற்றும் நிகழ்ச்சி மத்திய மார்க்கெட் பகுதியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக அந்த ஊர்க்காரர்கள் 700 பேர் கூடிவிட்டனர். குரான் வாசகங்களை படிப்பதன் மூலம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஹெல்மாண்டு கவர்னர் பேசுகையில் மர்ஜா பகுதி மக்களின் தேவைகளை நிறைவு செய்வோம் என்று உறுதி அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக