28 பிப்ரவரி, 2010

புதிய கட்சிக்கும் கொள்கை இல்லை

இன்னொரு தமிழ்க் கட்சி களத்துக்கு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இதன் பெயர். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிலிருந்து வெளியேற்றப் பட்ட சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் தான் இப்போதைக்கு இதன் தலைவர், செயலாளர், பொருளாளர், பொதுக் குழு எல்லாமே.

இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களா அல்லது வெளியேறியவர்களா என்பது சர்ச்சைக்குரிய விடயம். தாங்கள் வெளியேறியவர்கள் என்கின்றனர் இருவரும். இவர்கள் ரெலோ உறுப்பினர்கள். ரெலோ கூட்டமைப்பில் ஒரு உறுப்புக் கட்சி. ரெலோ இவர்களை இப்போது வெளியேற்றிவிட்டது. எனவே இவர்கள் கூட்டமைப்பிலி ருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்று கூறலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலி ருந்து பிரிந்தவர்கள் என்பதைக் கோடி காட்டும் வகையிலேயே தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்று பெயரிட்டிருக்கின்றார்கள். ஒரு பிவிடுதலைபீ கூடுதலாக.

ஒரு கட்சியிலிருந்து பிரிந்து இன் னொரு கட்சி உருவாகுவதெல் லாம் இலங்கை அரசியலுக்குப் புதியதல்ல. இலங்கையின் பழம்பெரும் அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்து உருவாகியவையே இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி (இப்போது அது மக்கள் ஐக்கிய முன்னணி), நவ சமசமாஜக் கட்சி என்பன. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து உருவாகியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. அதிலிருந்து பிரிந்தது ஸ்ரீலங்கா மஹஜன கட்சி.

ஒவ்வொரு கட்சியிலுமிருந்து பிரிந்து உருவாகிய கட்சிகள் ஒரு கொள்கைப் பிரகடனத்துடனேயே தோற்றம் பெற்றன. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தமிழரசுக் கட்சி உருவாகிய போது சமஷ்டி அதன் கொள்கையாக முன்வைக் கப்பட்டது. தமிழரசுக் கட்சியிலி ருந்து பிரிந்த சுயாட்சிக் கழகத் தின் கொள்கை தனிநாடு. தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக் கோட்டையில் தனிநாட்டுத் தீர் மானத்தை நிறைவேற்றியது. தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனி நாடு என்ற அடிப்படையிலேயே புலிகளின் செயலாணையை ஏற்றுச் செயற்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து உருவாகிய கட்சியே தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்ட மைப்பு. எவ்வாறான கொள்கை வேறுபாடு காரணமாக இப் பிளவு ஏற்பட்ட தென்பது தெரியவில்லை. கூட்டமைப்புத் தலைவர்கள் இன் றும் தனிநாட்டுக் கொள்கையில் நிற்கின்றார்கள் என்பது காரணமா? அல்லது தனிநாட்டுக் கொள்கை யைக் கைவிட்டுவிட்டார்கள் என்பது காரணமா?

புதிய கட்சியின் கொள்கை என்ன வென்று இதுவரை எவருக்கும் தெரியாது. இந்தக் கட்சி தங்களுடன் சேர்ந்து செயற்படும் என்று விக்கிரமபாகு கருணாரட்ன நம்பிக்கை தெரிவிக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் அவரும் சிவாஜிலிங்கமும் கூட்டாகப் பிரசாரம் செய்ததால் நம்பிக்கை தெரிவிக்கின்றாரா அல்லது இனப் பிரச்சினை தொடர்பாகத் தெளி வான கொள்கை இல்லாத ஒற்றுமை காரணமாக நம்பிக்கை தெரிவிக்கி ன்றாரா என்பது விளங்கவில்லை.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு என்கிறார் விக்கிரமபாகு. பிரிவினையா அல்லது ஐக்கிய இலங்கையில் சுயாட்சியா என்று கேட்டால் தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்கிறார். மெத்தச் சரி. அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் மக்களுக்கு இவ்விடயத்தில் கூறும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

சுயநிர்ணய உரிமையை பிவாய்ப்பாடுபீ ஆக்கி மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

இனப் பிரச்சினை தொடர்பாகக் கூட்டமைப்புக்கு இப்போது கொள்கை இல்லை. அதிலிருந்து பிரிந்த புதிய கட்சிக்கும் இதுவரை கொள்கை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக